விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 சிறுவர்களின் உடல்களை மீட்கப்பட்ட வழக்கில் குழந்தைகளின் தாய் கள்ளக் காதலன் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 சிறுவர்களின் உடல்களை மீட்கப்பட்ட வழக்கில் குழந்தைகளின் தாய் கள்ளக் காதலன் கைது !

 விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2  சிறுவர்களின் உடல்களை மீட்கப்பட்ட வழக்கில் குழந்தைகளின் தாய்  கள்ளக் காதலன் கைது !
வாணியம்பாடி, செப்டம்பர் 6- 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பவரு க்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் சிறுவர்களின் அழுகிய நிலையில் இருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். சம்பவம் தொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் வெளிச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). இவரது மனைவி சிவகாமி (வயது 24). இவர்களுக்கு திருமணம் முடிந்து பிரேம் குமார் (5 வயது),பிரதாப் (2 வயது) இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர்    இந்த நிலையில் சேட்டு கடந்த 6 மாதத்திற்கு முன்பு செம்மர கட்டை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆந்திரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட் டார். இதன் காரணமாக சிவகாமிக்கு மாமியார் வீட்டில் உரிய மரியாதை கிடைக்காததால் விருத்தி அடைந்து தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கேயும் அவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை.
அப்போது அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் ராஜா(வயது 34).இவருக்கு திருமணமாகி1 பெண், 2 ஆண் குழந்தைகள் என 3 குழந்தைகள் உள்ளன. 
சிவகாமிக்கு ராஜா உடன் பழக்கம் ஏற் பட்டு காதலாக மாறியுள்ளது. இதன் கார ணமாக கடந்த 6 மாதங்களாக தனிமை யில் இருந்து வந்த சிவகாமி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறப்படு கிறது. ஏற்கனவே கணவருக்கு பிறந்த இரண்டு மகன்களை என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலையில் 2 மகன்களை ஜமுனா மத்தூரில் இருந்து பேருந்தில் ஆலங் காயம் அழைத்து வந்து, அவர்களுக்கு பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடை யில் டீ மற்றும் பிஸ்கெட் வாங்கி கொடு த்து பின்னர் பெத்தூர் பகுதிக்கு அழை த்து சென்று அங்கே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பவரு க்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பிரேம்குமார் (5 வயது) பிரதாப் (2 வயது) ஆகிய இரண்டு பேரை யும் தூக்கி வீசிவிட்டு அங்கே இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர் இரண்டு மூன்று தினங்களாக இங்கேயும் அங்கேயும் அலைந்த பின்னர் இதுகுறித்து கள்ளக்காதலன் ராஜாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜா, சிவகாமிக்கு மூன்று நாட்கள் தனிமையில் வைத்து பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், தனிப்பட போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருவதை அறிந்து சிவகாமிக்கு அவரு டைய தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள் ளார். அங்கே குழந்தைகளை இல்லாமல் சிவகாமி வீடிற்கு சென்றதால் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குழந்தை கள் குறித்து கேட்டுள்ளனர். முன்னுக்கு பின் பதில் அளித்ததால் இது குறித்து ஊர் நாட்டாண்மை மூலமாக ஜமுனா னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொட ர்ந்து ஜமுனானத்தூர் போலீசார் சிவகா மியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு ஆலங்காயம் போலீசாரி டம் ஒப்படைத்தனர். ஆலங்காயம் போலீ சார் மேற்கொண்ட விசாரணையில் இரு மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த குற்றத்தை சிவகாமி ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து சிவ காமி மற்றும் குற்றவாளிக்கு அடைக் கலாம் கொடுத்த அவரது கள்ளக்காதலன் ராஜா ஆகிய 2 பேரை ஆலங்காயம் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் ஜெ.எம்.3  குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் அடைத்தனர். பெற்ற மகன்களை தாய் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம் பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை யும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad