கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மாவிடந்தல் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி சாலை ஓரத்தில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்தன. இதனைக் கண்ட வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையோரம் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை ஓடிச்சென்று போட்டி போட்டுக்கொண்டு பொறுக்கி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவ்வாறு எடுத்ததில் ஒருவருக்கு 5000, ஒருவருக்கு 2000, ஒருவருக்கு 4000 என கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். சிறிது நேரத்தில் கீழே கிடந்த பணத்தை உற்றுப் பார்த்தபோது அது கள்ள நோட்டு போல் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
யாரோ காரில் சென்றவர்கள் கள்ள நோட்டுகளை சாலையில் வீசிச் சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதனால் மாவிடந்தல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் கிடந்தது உண்மையில் கள்ள நோட்டா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த எடைக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக