பெற்­றோர்­க­ளை­யும் ஆசி­ரி­யர்­க­ளை­யும் வாழ் ­நா­ளில் மறக்­கக்கூடாது ஆற்காடு நிகழ்ச்சியில் ஜி.வி.செல்­வம் பேச்சு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

பெற்­றோர்­க­ளை­யும் ஆசி­ரி­யர்­க­ளை­யும் வாழ் ­நா­ளில் மறக்­கக்கூடாது ஆற்காடு நிகழ்ச்சியில் ஜி.வி.செல்­வம் பேச்சு !

பெற்­றோர்­க­ளை­யும் ஆசி­ரி­யர்­க­ளை­யும் வாழ் ­நா­ளில் மறக்­கக்கூடாது ஆற்காடு நிகழ்ச்சியில் ஜி.வி.செல்­வம் பேச்சு !
ஆற்காடு , செப்டம்பர் 26 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்­காடு காம­ரா­ஜர்  அறக்­கட்­டளை  சார்­பாக கல்­லூரி மாணவ, மாண­வி­களுக்கு கல்வி உத­வித் தொகை வழங்­கும் விழா ஆற்­காடு
நக­ராட்சிஅருகே உள்ள மண்­டபத்­தில் நடை பெற்­றது.நிகழ்ச்­சிக்கு தங்­கபாண்­டி­யன் தலைமை தாங்­கி­னார். அறக்­கட்­டளை செய­லாளர் பொன் சர­வ­ணன் முன்­னிலை வகித்து பேசி­னார்.உத­வும் உள்­ளங்­கள் சந்­தி­ரசேகர் , ஜெய­ல­லிதா,
கணேஷ் ஆகி­யோர் வாழ்த்­துரை வழங்­கி­னார்கள் விழா பேருரை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சுகு­மார் ஆற்­றி­னார். சிறப்பு விருந் தின ­ராக வி.ஐ.டி. பல்­கலைக்­க­ழக   துணை தலை­வர் டாக்­டர் ஜி.வி. செல்­வம் கலந்துகொண்டு மாண­வர்­க­ளுக்கு
ரூபாய் 4.30 லட்­சம் மதிப்­புள்ள கல்வி உதவித்தொகையை வழங்கி பேசி­ய­தா­வது ஆற்­காடு என்­றால் ஒரு சிறப்பு வாய்ந்த நக­ர­மா­கும் அந்த இடத்­திற்கு மேலும் பெருமை சேர்க்க கூடியஅளவில் காம­ரா­ஜர்அறக் கட்­டளை சார்­பாக கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு உத­வித்­தொகை வழங்­கு­வது மிகவும் சிறப்­பா­கும் காம­ரா­ஜர் என்ற பெயரை காம­ரா­சர் என்று மாற்­றி­ய­வர் பெரி­யார் காம­ரா­ஜர் 54–ல் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் ஒரு முறை பயணம் சென்ற பொழுது ரயில்வேகேட் அடைக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்பொ­ழுது மாணவர்­ கள் எல்­லாம்விளை­யா­டிக் கொண்­டி­ருந்­த
னர் அவர்­க­ளி­டம் கேட்ட பொழுது அவர்­க­ளுக்கு உணவு இல்­லா­த­தால் பள்­ளி­க­ளுக்கு செல்­வ­தில்லை என கூறி­னர். உட­ன­டி­யாக அவர்மாண­வர்­க­ளுக்கு உணவு வழங்க திட்­டத்தை கொண்டு வந்­தார். அதன்­படி 18000மாண­வர்­கள் படித்த இடத்­தில் 36 ஆயி­ரம் மாண­வர்­கள் சேர்ந்­த­னர்.
அது போல மூடிக்­கி­டந்த 3400 பள்­ளி­களை திறந்து மாண­வர்­க­ளின்கல்­விக்­காக மிக­வும் பாடு­பட்­டார். நீங்­கள் உங்­களது பெற் றோர் மற்­றும் ஆசி­ரி­யர்­களை ஒரு­பொ­ழு ­தும் மறக்க கூடாது. அவர்­கள் தான் உங்­
க­ளு­டைய உயர்­வுக்கு கார­ணமா­ன­வர்­ களை எனவே நீங்­கள் நன்­றாக கற்று நல்ல வேலை­யில் சேர்ந்த பொழுது அவர்­களை மறக்­கவே கூடாது. மேலும் இது போன்ற கல்வி உத­வித்­தொகை கொடுப்­பவர்­க­ளை­யும் மறக்­கக்­கூ­டாது. இவ்­வாறு பேசி­னார். முடிவில் பாஸ்­க­ரன் நன்றி கூறி­னார்.இந்த நிகழ்ச்­சி­யில் கணேஷ்­
ஜிம்சங்­கர் பிச்­சாண்டி ஏ.வி.டி.பாலா  உட்­பட ஏராள­மான பிர­மு­கர்­கள் கலந்து கொண்­ட­னர் .

ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad