ரோட்டரி சங்கம் நகராட்சி மேல் நிலைப்
பள்ளி என் எஸ் எஸ் இணைந்து மரக் கன்றுகள் வழங்கும் விழா !
குடியாத்தம்.செப்டம்பர் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம், நகராட்சி மே. நி. பள்ளியின் என். எஸ். எஸ் இணைந்து ஏற்பாடு செய்த காய்கறிச் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா 27/ 9 /26 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில் காந்தி நகர் உயர்நிலைப் பள்ளியில் மிகச் சிறப் பாக நடைற்றது ரோட்டரி சங்கத் தலைவர் T. S. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெ. தமிழ்ச் செல்வன், வருங் கால தலைவர் மதியழகன், பிரஸ் ஜெ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் குறுங்காடு வளர்ப்புக்காக தமிழ்நாடு முதல்வர் விருது பெற்ற இளைஞர் G. ஸ்ரீகாந்த் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றினார். கண் தானம் உடல் தானம் தலைவர் எம்.ஆர். மணி என் எஸ் எஸ் மாணவர்களுக்கு கண்தானம், உடல் தானம் செய்வதன் முக்கியத்துவத் தை விளக்கினார் பசுமை முதன்மையா ளர் விருது பெற்ற டி ராஜேந்திரன் ரூபாய் 5000 மதிப்பில் கிராமப் பொதுமக்களுக் கும், என் எஸ் எஸ் மாணவர்களுக்கும் ச் செடிகளையும், மரக்கன்றுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார் இதற்
கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் பி. பிரேம் சாய்பாபா, திட்ட அலு வலர் சிவ சூரியன் செய்திருந்தார்கள்
இறுதியாக உதவி திட்ட அலுவலர் செந் தில் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக