செப் 26. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள கருங்குளம் வகுளகிரி மலை மீது வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி கோவில் க புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை கருடசேவை நடந்தது.
காலை 7.15 மணிக்கு விஸ்வரூபம். 8.30 மணிக்கு உற்சவர் சீனிவாசன் தெற்கு கோவில் எழுந்தருளினார். 9.30 மணிக்கு 108 கலச சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 11.30 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவிக்கப்பட்டு சாத்துமுறை கோஷ்டி நடந்தது. தீர்த்தம். சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை 7.30 மணிக்கு உற்சவர் சீனிவாசன் வாகன மண்டபம் எழுந்தருளி கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் கருடவாகனம் வகுளகிரி மலை மீது சுற்றி வலம் வந்தார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். அறங்காவலர்கள் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் ராஜேஷ் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக