நெல்லையில் இந்திய மருத்துவ கவுன்சில் திருநெல்வேலி கிளை, தென்னிந்திய இந்திய மன நல சொசைட்டி, திருநெல்வேலி டான் சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் சினேகா மன நல மையம் இணைந்து, உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிபடு நடத்திய தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சினேகா மனநல மையத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் மருத்துவர் அசுவத் பாபு வரவேற்றுப் பேசினார். திருநெல்வேலி டாண் சிட்டி லயன்ஸ் சங்கத்தலையர் ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர் கண்ணன், தற்கொலை தருப்பு குறித்து விழிப்புனர்வு உரையாற்றினார் சினேகா மனநல மைய மருத்துவர் பன்னீர்செல்வன், தற்கொலைக்கான காரணங்களையும் அதை தடுக்கும் வழிமுறைகளையும் விவரித்து, மனநல ஆலோசனைகளை வழங்கி உரையற்றினார்
டாண் சிட்டி லயன்ஸ் சங்க பட்டயத்தயைர் S.V.ஜானகிராம் அந்தோணி, சங்க செயலாளர் M.C.ராஜன்-சங்க நிர்வாகியும் மாவட்டத் தலைவருமான பொன்ராஜ் மருத்துவர்கள் வாசுகி, சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்கில் சினேகா மனறல மைய பயிற்சி செவிலியர்கள், நர்ஸிங் பள்ளி மாணவிகள், ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக