வாணியம்பாடி, அக்டோபர் 26 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் சென் னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில், நக ராட்சி குப்பைக் கிடங்கிற்கு எதிரே வாணி யம்பாடி கோணாமேடு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தீபன் குமார் (வயது 18), இருசக்கர வாகனத்தில் வாணியம் பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆம்பூரில் இருந்து வாணியம் பாடி நோக்கி வந்த தனியார் பேருந்து, தீபன் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தீபன் குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே யே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி கிராமிய போலீசார், விரை ந்து சென்று உயிரிழந்த தீபன் குமாரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோத னைக்காக வாணியம்பாடி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் பேருந்தைப் பறிமுதல் செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறி த்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். வாணியம்பாடி அருகே பேருந்து மோதிய விபத்தில் 18 வயது வாலிபர் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தி னர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக