தடையில்லாமல் நூல் பாவு மற்றும் கூலி உயர்வு கோரி கைத்தறி நெசவாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கூலி உயர்வு கோரியும் தடையில்லாமல் நூல் பாவு கொடுப்பதை உறுதி செய்ய கோரி யும் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத் தில் உள்ளே கைத்தறி நெசவாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு
குடியாத்தம் ,அக்டோபர் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கைத்தறி உரிமையாளர்கள் 8 லுங்கிகள் நெய்வதற்கு 2200 கூலி கொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கூலி 1800 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் மே லும் தடையில்லாமல் நூல் பாவு கொடுப் பதில்லை எனவும் குறைந்துள்ள கூலி உயர்வை கேட்டும் தொடர்ந்து நூல் பாவு வழங்க உறுதி செய்யவும் கோரி குடியாத் தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற போது வட்டாட்சியர் வட்டாட்சியர் பிரியா அங்கு இல்லாததால் கைத்தறி நெசவா ளர்கள் அதிகாரிகள் இல்லை எனக்கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாத த்தில் ஈடுபட்டு தரையில் அமர்ந்து தர் ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வட்டாட் சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீ சார் மற்றும் வட்டாட்சியர் பிரியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவா ளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத் தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கைத் தறி நெசவாளர்கள் அங்கிருந்துகலைந்து சென்றனர் இதனால் வட்டாட்சியர் அலுவலக பகுதியில் குறிப்பான சூழல் காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக