காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முயன்றதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் அதிகரித்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, அந்த வழியாகச் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இரவு நேரத்திலும் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் போக்குவரத்தை முழுமையாகச் சீரமைக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையால் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளிடையே பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.
D. செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக