வானதிராயபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2026

வானதிராயபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்..

 


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வானதிராயபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது வானதி ராயபுரம்
ஊராட்சி செயலர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பற்றாளர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்
மேலும் கிராமசபை கூட்டத்தில் வானதிராயபுரம் ஊராட்சி பகுதியில் சாலை வசதிகள் தெருரவிளக்கு வசதிகள் சுகாதாரமான குடிநீர் வசதி
உள்ளிட்டவை செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
மேலும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் அன்பு எல் நினோ குறித்த விழிப்புணர்வும் அதனால் பொதுமக்கள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் 
மேலும் கிராம சபை கூட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் தங்கள் பகுதியில் பத்திரப்பதிவு செய்ய தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

மேலும் சுரங்கத்தை ஒட்டி உள்ள பகுதி என்பதால் குடிநீர் பற்றாக்குறை அவ்வப்போது நிலவி வருகிறது எனவே என்எல்சி நிர்வாகம் செயல்படுத்தி வரும் கூட்டு குடிநீர் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad