கள்ளக்குறிச்சியில் ‘வெற்றி பயணம்’ திட்டம் தொடக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தொடங்கி வைத்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2026

கள்ளக்குறிச்சியில் ‘வெற்றி பயணம்’ திட்டம் தொடக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தொடங்கி வைத்தனர்.


தமிழகத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ‘வெற்றி பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் ‘வெற்றி பயணம்’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜா மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பயணம் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதன் மூலம் பொதுமக்களுக்கு இத்திட்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், போக்குவரத்துத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் திட்டத்தின் செயல்பாடுகள் தொடங்கின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad