நீலகிரி மாவட்டத்தில் இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணைத்து சுற்றுலா தலங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை மூட நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (23.10.2026) இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும், மிக கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு உள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை சீராகும்வரை நீலகிரி மாவடடத்திற்கு வருகை புரிவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பல்வேறு இடங்களில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக உதகமண்டலம் செல்லும் பொதுமக்கள் மலைப்பாதைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெள்ளம் சூழ்ந்த சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அடுத்த மூன்று நாட்களுக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அரசு போக்குவரத்து சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. உதகை கோட்டத்திற்கு 0423-24455772 குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002 கூடலூர் கோட்டத்திற்கு 04262-261296 உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் எவ்வித அச்சம் அடைய வேண்டாம் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக