நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட மண் சரிவில் பேருந்தில் சிக்கிப் பாதிக்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு பேருந்து நடத்துநர் உள்ளிட்டோரின் உடல்நலம் குறித்து கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் மற்றும் அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான கமலி அவர்கள் நேரில் விசாரித்தார்.
மேலும் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்து, தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக