ஸ்ரீமுஷ்ணத்தில் உலக போலியோ ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 அக்டோபர், 2026

ஸ்ரீமுஷ்ணத்தில் உலக போலியோ ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்பு.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் மற்றும் எஸ்.பி.ஜி. பள்ளி இணைந்து நடத்திய பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீமுஷ்ணம் நான்கு வீதிகளின் வழியாகச் சென்ற இந்த விழிப்புணர்வு பேரணியை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஒருங்கிணைத்தனர். நிகழ்வில் லோட்டஸ் சங்கத் தலைவர் ரவிசங்கர், ரவிசுந்தர், வீரவேல், ஷேக்சேட்டு, குருராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் திரளான பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
பேரணியில் பங்கேற்ற எஸ்.பி.ஜி. பள்ளி மாணவ, மாணவிகள் போலியோ ஒழிப்பின் முக்கியத்துவத்தையும், குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு, போலியோ இல்லா சமூகத்தை உருவாக்குவோம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நகரின் முக்கிய நான்கு வீதிகளையும் வலம் வந்த இந்த பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்

செய்திகளுக்காக 
P ஜெகதீசன் மாவட்ட ஒளிப்பதிவாளர்
தமிழக குரல் கடலூர் மாவட்டம் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad