அறநிலையத்துறை ஆணையர் வினய், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா வரும் 10 ம் தேதி தொடங்குகிறது. 15 ம் தேதி முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்காரம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. கடற்கரையில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் தலைமையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கடற்கரை மற்றும் பக்தர்கள் தங்குமிடம், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா. அருள் முருகன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், மண்டல ஆணையர் ரோஜாலி, இணை ஆணையர் அருணாச்சலம் துணை ஆணையர் நாராயணன், உதவி ஆணையர் லோகநாதன், காவல் ஆய்வாளர் அம்பேத்கர், வேல் ராமகிருஷ்ணன், செந்தமிழ் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் பிரபாகரன், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மதி.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக