226 கிலோ குட்கா புகையிலைப் பொருட் கள் கடத்தி வந்த நபர் கைது கடத்தலுக் குப் பயன்படுத்திய கார் பறிமுதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 நவம்பர், 2026

226 கிலோ குட்கா புகையிலைப் பொருட் கள் கடத்தி வந்த நபர் கைது கடத்தலுக் குப் பயன்படுத்திய கார் பறிமுதல் !

 226 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது – கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் !
ராணிப்பேட்டை , நவம்பர் 3 -
          ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழக அரசால் தடை செய்யப் பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொரு ட்களை சட்டவிரோதமாக விற்பனை செய் வோர் மற்றும் கடத்துவோர் மீது மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக  சிப்காட் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட லாலாபேட்டை ஜங்ஷன் பகுதி யில், காவல் ஆய்வாளர்  மங்கையர்க் கரசி, தலைமையிலான துணை ஆய்வா ளர் சிறப்பு தனிப்படை SBCID ஆய்வாளர் வினோத், உடன் சிப்காட் காவல் நிலைய காவலர்கள் குழுவாக தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகை யிலைப் பொருட்கள்இருப்பதுகண்டறியப் பட்டது.இதையடுத்து, சுமார் ரூ.1,50,000/- மதிப்புள்ள 226 கிலோ குட்கா புகையி லைப் பொருட்கள் மற்றும் அவற்றைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த ரமேஷ் (வயது 45), த/பெ. ஜோன்குமார் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad