ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 7,000 மெட்ரிக் டன் நெல் சேமிப்புக் கிடங்குகள் திறப்பு இயற்கை இடர்பாடுகளிலிருந்து நெல்மணிகளைப் பாதுகாக்க புதிய வசதி உணவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2026

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 7,000 மெட்ரிக் டன் நெல் சேமிப்புக் கிடங்குகள் திறப்பு இயற்கை இடர்பாடுகளிலிருந்து நெல்மணிகளைப் பாதுகாக்க புதிய வசதி உணவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மொத்தம் 7,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு நெல் சேமிப்புக் கிடங்குகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட ரமணன் திறந்து வைத்தார்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு கிராமத்தில் 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்புக் கிடங்கும், அதேபோல் மேலப்பாளையூர் கிராமத்தில் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மற்றொரு நெல் சேமிப்புக் கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கிடங்குகளும் சேர்த்து மொத்தம் 7,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் வசதியைக் கொண்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட ரமணன் கலந்து கொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்திய செந்தில்குமார், நெல் கொள்முதல் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெல் சேமிப்புக் கிடங்குகள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க முடியும் என்றும், மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் நெல்மணிகள் சேதமடைவது பெருமளவில் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நெல் மணிகள் தரம் குறையாமல் பாதுகாக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்குவதற்கும் இந்தச் சேமிப்புக் கிடங்குகள் பெரிதும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

ஸ்ரீமுஷ்ணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும், அரசின் நெல் கொள்முதல் மற்றும் சேமிப்புப் பணிகளை மேம்படுத்துவதற்கும் இந்தப் புதிய கிடங்குகள் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளுக்காக 
ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad