வெம்பாக்கம் கிளை நூலகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா வந்தவாசியில் க. ஜெயச்சந்திரனுக்கு நூலகர்கள், ஆசிரியர்கள் பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2026

வெம்பாக்கம் கிளை நூலகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா வந்தவாசியில் க. ஜெயச்சந்திரனுக்கு நூலகர்கள், ஆசிரியர்கள் பாராட்டு.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி முழுநேர கிளை நூலகத்தில் வெம்பாக்கம் கிளை நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற க. ஜெயச்சந்திரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்தவாசி கிளை நூலகர் சி. சேகர் தலைமை தாங்கினார். தெள்ளாறு கிளை நூலகர் என்.கே. பெருமாள் அனைவரையும் வரவேற்றார். மழையூர் கிளை நூலகர் பூ. சண்முகம் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பட்டிமன்ற நடுவர் ஆர்.எஸ். சிவகுமார், ஓய்வுபெற்ற நூலகர் க. ஜெயச்சந்திரனைப் பாராட்டி சிறப்புரையாற்றினார். அப்போது, நூலகப் பணியில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெயச்சந்திரன் சிறந்த பணியாளர் என்றும், எளிமையான பண்பைக் கொண்டவர் என்றும் பாராட்டினார்.

தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். பழனி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ந. மதிவாணன், ஓய்வுபெற்ற நூலகர் சிவசங்கரன், சாத்தனூர் கிளை நூலகர் தா. கிருஷ்ணன், அனக்காவூர் கிளை நூலகர் பச்சையப்பன், அசனமாபேட்டை கிளை நூலகர் இளங்கோ மற்றும் ஊர்ப்புற நூலகர்கள் தூசி அறிவழகன், பிரம்மதேசம் சீனிவாசன், கொரக்கோட்டை மாரி, பொன்னூர் வேல்முருகன், நெற்குணம் தெய்வசிகாமணி, அழிவிடைதாங்கி பெருமாள், ஆணைபோகி பாலகிருஷ்ணன், மடம் தாரா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நூலகர் க. ஜெயச்சந்திரன் ஏற்புரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியை சி.ம. புதூர் கிளை நூலகர் ஜா. தமீம் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். இதில் நூலக வாசகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கிளை நூலகர் சங்கர் நன்றி கூறினார்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad