கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் ஊராட்சியில் ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் கிராம சபை கூட்டத்தில் பெரும்பாலும் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் குழந்தைகளை அழைத்து வந்து அமர வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் ஊராட்சி செயலர் கருணாநிதி மீது பல ஊழல் புகார் இருப்பதாகவும் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு செய்ததாகவும் குடிநீர் தேக்க தொட்டியை சரிவர சுத்தம் செய்யாமல் பொதுமக்களுக்கு நோய் வருவதாகவும் பைப்லைன் உடைந்து அதனை சரி செய்ததாக 50000 ஆயிரத்துக்கு மேல் ஊழல் செய்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் கிராம சபை கூட்டத்திற்கு புறக்கணித்த விவசாயிகளுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட மாட்டோம் என பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பேசியதாக குணமங்கலம் ஊராட்சி பொதுமக்கள் குற்றம் சாத்தி வருகின்றனர் இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் இவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா என்பது பலரும் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர்
ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக