பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடை வியாபாரிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 நவம்பர், 2026

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடை வியாபாரிகள்.


 கடலூர் மாவட்டம் வடலூர் கடந்த திமுக ஆட்சியில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய இட வசதி இன்றி நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டு வரும் கால்நடை வியாபாரத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் 

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு வடலூர் சுற்றுவட்டார பகுதிகளான நெய்வேலி சேத்தியதோப்பு குறிஞ்சிப்பாடி கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்கள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வழக்கம்

இந்நிலையில் வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் ஆடு மற்றும் மாடு விற்பனைக்காக இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் வளர்ப்பு பிராணிகளான கோழி புறா உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் நெடுஞ்சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் கால்நடை விற்பனையில் ஈடுபட்டு வரும் விற்பனையாளர்களால் அதிகாலையிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

அதிகாலை வேளையில் வடலூர் நான்கு முனை சந்திப்பில் கால்நடைகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு வரும் வியாபாரிகளை இடைத்தரகர்கள் வழிமறித்து சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விற்பனை செய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் 
மேலும் இதனால் கால்நடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது 
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் இதுபோன்று சம்பவம் நடைபெறுவது தொடர்கதை ஆகி வருவதாக 

வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் வடலூர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அதிகாலை வேளையில் கனரக வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்

 இதுகுறித்து கால்நடை வியாபாரிகள் தெரிவிக்கையில் ஆடு மற்றும் மாடு உள்ளிட்ட கால்நடைகளை கால்நடை உரிமையாளர்கள் விற்பனை செய்வதற்கு வடலூர் புதிய நீதிமன்றம் வளாகம் அருகே நகராட்சி நிர்வாகத்தால் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கோழி விற்பனை செய்வதற்கு போதிய இட வசதி அமைத்து தராததால் சாலையோரங்களில் நின்று வியாபாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என வேதனை தெரிவித்து வருகின்றனர் 

கடலூர் மாவட்டம் மட்டுமல்லா பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்து வரும் எங்களுக்கு வடலூர் நகராட்சி நிர்வாகம் போதிய இடவசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

D.தனுஷ்
குறிஞ்சிப்பாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad