கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் உள்ள விளம்பர பேனர்களை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கடலூர் விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் உள்ள நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அலட்சியம் காட்டி வரும் வடலூர் நகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குமுறுகின்றனர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு வடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வடலூர் நகராட்சி ஆணையர் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டதன் அடிப்படையில் வடலூர் நகராட்சி நுழைவாயிலில் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது மேலும் நான்கு முனை சந்திப்பு மற்றும் முக்கிய இடங்களில் பேனர் வைக்க நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்
ஆனால் ஆணையாளரின் உத்தரவு பெயர் அளவில் மட்டும்தான் செயல்பாட்டில் இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளம்பர பேனர்கள் ஆங்காங்கே நான்கு சாலைகளிலும் வைக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பாளர்கள் சாலை வரை தங்கள் கடைகளின் விளம்பர போர்டுகளை வைத்து நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வரும் நிலையில் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள சூழலில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் ஆக்கிரமிப்புகளால் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
இருசக்கர வாகன ஓட்டிகள் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தங்களது வாகனங்களை கடை போர்டுகள் உள்ள காரணத்தினால் சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர் இதனால் கனரக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது வடலூர் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்ய முழு முயற்சியில் ஈடுபட்டாலும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளால் பல உயிர் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற
வடலூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தயங்குவது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது
மேலும் வடலூர் நகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பிப்பதோடு நிறுத்தி விடுவதாகவும் அதனை பின்பற்ற தயங்குவதாகவும் குற்றச்சாட்டை எழுந்துள்ளது
தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அரசுக்கு அவ பேரு விளைவிக்கும் வகையில் செயல்படும் இதுபோன்ற அதிகாரிகளின் செயல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே முகசூழிப்பை ஏற்படுத்தி வருகிறது
ஆக்கிரமிப்பு மற்றும் பேனர்களை வேடிக்கை பார்த்தவாறு இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கி செல்வதால் விபத்துக்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது
கடலூர் மாவட்ட ஆட்சியர் பேனர்களை வைக்க தடை விதித்து உத்தரவிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர்
பேனர்கள் மற்றும் அக்கிரமிப்புகளால் உயிர் சேதம் ஏற்பட்டால் தான் ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்வார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக