நெல்லை மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி மைய கூட்ட அரங்கில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் துணை மேயர் ராஜூ, ஆணையாளர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் திருக்குறள் வாசிக்கப்பட்டு தொடங்கியதும் மேயர் சிறப்பு தீர்மானங்களை வாசித்தார்.
அடுத்த மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நெல்லைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை மாநகராட்சி சார்பில் வரவேற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் புதிய திட்டங்களுக்கான பணிகளை தொடங்கி வைப்பதற்கு நன்றி தெரிவிப்பது , மாசு இல்லாத தூய்மையான காற்று வீசும் நகரமாக நெல்லை மாநகராட்சி அறிவிக்கப்பட்டதற்கு மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது,
ஏழை எளிய மக்களுக்கு கல்வி வழங்கி வரும் பழமையான பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரிக்கு நுழைவு வாயில் அமைப்பது, வி.எம்.சத்திரம் பகுதியில் சாலை விரிவாகத்தின் காரணமாக அங்கிருந்து மார்பு அளவு வ.உ.சி சிலை அகற்றப்பட்டு சாலை பணிகள் முடிந்ததும் புதிய சிலை அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். பின்னர் சாதாரண மற்றும் அவசர கூட்டத்தின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது . முன்னதாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
Visual live bag
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக