சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யோகா தின விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யோகா தின விழா


 சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யோகா தின விழா கொண்டாட்டம்


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று 21.6.2025 சனிக்கிழமை தேசிய யோகா தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 


இவ்விழாவில் பள்ளியின் துணைத் தலைவர் பி ஏ மகேந்திரன், செயலாளர் சுகந்தி பட்டு ராஜன்,துணை செயலாளர் என் பிரபாகரன் ,முதல்வர் கே சுந்தர பாண்டியன் இருபால் ஆசிரியர் பெருமக்கள் 2000 மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சங்கராபுரம் பகுதி மனவள கலை மன்றத்தின் தலைவர் திருவாளர் RVN சீனிவாசன், செயலாளர் S. முருகன் மற்றும் மனவள கலை மன்றத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு யோகா தினத்தை பற்றியும் அதனுடைய நன்மை தீமைகளை பற்றியும் மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் எடுத்துரைத்தார்கள்..


இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad