தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வடலூர் சுதா மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வடலூர் சுதா மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.


வடலூர், ஜூலை 1 -

கடலூர் மாவட்டம் வடலூர் விருதாச்சலம் சாலையில் உள்ள சுதா மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது சுதா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்ற முகாமில் விருதாச்சலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டே ரத்த மாதிரிகளை பரிசோதனை மேற்கொண்டனர், பின்னர் முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.


மருத்துவமனையின் நிறுவனர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஆண்டுதோறும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இம்ம மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்து வருகின்றனர் மேலும் இளைஞர்கள் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி ரத்தம் கொடுக்க முடியாத சூழலை ஏற்படுத்திக் கொள்ளாமல் அதிகப்படியாக ரத்ததானம் செய்ய தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad