விழுப்புரம், ஜூலை 30:
இந்த நிகழ்வில் 38வது வார்டு செயலாளர், தொழிலாளர் அணி அமைப்பாளர், மற்றும் கழகத்தின் பல்வேறு நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டனர். மேலும் மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி அமைப்பாளர், மகளிர் அணி அமைப்பாளர், சுற்றுச்சூழல் அமைப்பாளர், தெற்கு நகர செயலாளர், வெண்மணியாத்தூர் கிளைச் செயலாளர் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்று சமூகத்துக்கான தங்களது பங்களிப்பை வழங்கினர்.
இந்த விலையில்லா உணவகம், சமூக நலன் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படும் உயரிய சேவையாகும். தொடர்ந்து 39வது நாளாக நடைபெறும் இந்த நிகழ்வின் மூலம், ஏழை-எளிய பொதுமக்களுக்கு இலவசமாக சத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறது. இது போன்ற சேவைகள் சமூகத்தில் மனித நேயம், நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை வளர்க்கும் முயற்சிகளாக பார்க்கப்படுகிறது. ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சேவையை பாராட்டி, நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் தெற்கு மாவட்டம் முன்னெடுத்து வரும் சமூக நல திட்டங்களில் “விலையில்லா உணவகம்” என்பது மிகவும் வரவேற்கப்படும் சேவையாக இருக்கும் நிலையில், இது தொடர்ந்து நடைபெற மக்கள் மத்தியில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக