உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது இதையொட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு காணொளி நிகழ்ச்சி மாணவர்களிடையே இன்று நடத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் சென்னை மக்கள் தொகை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் திரு சின்னத்துரை அவர்கள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று மாணவர்களிடையே மக்கள் தொகை தினத்தினுடைய முக்கியத்துவம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பதிவுகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு காணொளி காட்சி வாயிலாக நேரலையில் விளக்கினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பது குறித்து விளக்க படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளுடன் அவர் விளக்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை திருமதி இவாஞ்சலின் ஆசிரியர்கள் வீரபாண்டி சுடலைமுத்து மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக