ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த அக்காள்மடம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் ஆட்டோவும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
ராமேஸ்வரம் அருகே அக்காள்மடம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக