சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய கலையரங்கு திறப்பு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய கலையரங்கு திறப்பு விழா

 


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கலையரங்கு அமைக்க வேண்டும் என கிராம மக்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவனிடம் வைத்த கோரிக்கையின் படி கலையரங்கு கட்டுவதற்கான தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியை ஒதுக்கி தந்தார். இந்நிலையில் அதன் பணிகள் நடைபெற்று  முடிவுற்றபின்15/08/2025ல் திறப்பு விழா நடைபெற்றது. அதிமுகஒன்றியச் செயலாளர் சி.என். சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் பங்கேற்று புதிய கலையரங்கு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து
கழக நிர்வாகிகள் மற்றும்  பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். கிளைக் கழக செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad