விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் இன்று வண்ணாரப்பேட்டையில் பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகே தனியார் இடத்தில் தற்காலிக குளம் ஏற்படுத்தி அதில் கரைக்க இருக்கிறது
அதை முன்னிட்டு சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் 25 பேர் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர்..
உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் திருநெல்வேலி மாநகர நிலைய அலுவலர் சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி மாநகர தீயணைப்பு நிலைய நீச்சல் வீரர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக