போலீசார் குவிக்கப்பட்டு கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவலகம் சாலையில் சாலையில் போக்குவரத்து மாற்றம்
நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் ஆவணங்கள் எதுவும் இன்றி விவசாய நிலங்களை போலிப்பட்டா போட்டுக் கொடுப்பதாகவும் தனியார் நிறுவனம் குண்டர்கள் மூலம் விவசாய நிலங்களில் உள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதாகவும் கூறி பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் 500க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஷ்ட் கம்யூ கட்சி நிர்வாகிகள் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளுடன் முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர்.
இதை அடுத்து நெல்லை ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து மூடப்பட்டது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்படாது தொடர் போராட்ட நடத்திய நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர்கள் பிரசன்ன குமார் மற்றும் வினோத் அந்தரமாகிய ஒரு சம்பவ இடத்திற்கு வந்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிலரை மட்டும் மனு அளிக்க காவல்துறையினர் அனுமதித்த நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினர் அவர்கள் அளித்த மனுவில்:
பாளையங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான இடத்தில் 25 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்தினர் கிரையம் பெற்றுள்ளனர்.
ஆனால் இப்பகுதியின் ஏழை, எளிய விவசாயிகள் நிலமான 49 ஏக்கர் பரப்பளவை போலி பத்திரப்பதிவு மூலமும், கிரையம் ஏதும் நடக்காமலே தங்களது பெயரில் பட்டாக்களை பதிவு செய்துள்ளனர்.
நிலத்தை போலியாக பட்டா மாற்றம் செய்தது மட்டுமில்லாமல் அதனை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட முயற்சிப்பதுடன், பொதுப்பாதை, சுடுகாடு உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனர்.இதுகுறித்து உரிய ஆவணங்களுடன் நெல்லை ஆர்டிஓ அலுவலகத்தில் பலமுறை சம்பந்தப்பட்ட விவசாயிகள் புகார் மனுக்களையும் அளித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் இதுகுறித்து பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெறும் என கடிதம் மூலம் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் இல்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஆரோக்கியநாதபுரம் கிராம மக்கள் தங்களது நிலங்களை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்.
ஆரோக்கியநாதபுரம் ஊர் மக்கள் நடத்திய போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் கொக்கரகுளம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக