2 வருஷமாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 நவம்பர், 2025

2 வருஷமாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட்.

2 வருஷமாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் அலுவலகம் முன்பு பேருந்து நிழற்குடை கட்டுவதற்கு கடந்த வருடம் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்பு ஒரு ஆண்டுகளாக எந்த வித பணிகளும் செய்யவில்லை. தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது.

மழைக்காலம் துவங்கிவிட்டது அதற்கு முன்பே இந்த பேருந்து நிழற்குடை  பணியை முடிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 

தற்போது பருவமழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

ஒரு பேருந்து நிழற்குடை கட்டுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றால் ஒரு பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்றால் எத்தனை வருடம் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

ஒரு திட்டம் மக்களுக்கான திட்டம் என்பதை மனதில் வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும். மேலும் இந்தப் பணிகள் இத்தனை நாட்களில் துவங்கி குறிப்பிட்ட நாட்களில் முடிக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தும் எதனால் தான் தாமதம் ஆகிறது என்பது தெரியவில்லை. 

தாமதம் ஆனாலும் தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மீது  நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும் இல்லை. ஆகவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பேருந்து நிழற்குடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும், 

தாமதிக்கப்படும் நீதி ! மறுக்கப்படும் நீதிக்கு சமம் !! வாசகங்களுடன் ராதாபுரம் வழக்கறிஞர் K.காமராஜ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad