திருநெல்வேலி மாநகர ஓய்வூதியர்கள் சங்க 26 ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஜூன், 2026

திருநெல்வேலி மாநகர ஓய்வூதியர்கள் சங்க 26 ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்.

திருநெல்வேலி மாநகர ஓய்வூதியர்கள் சங்க 26 ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் 

திருநெல்வேலி மாநகர ஓய்வூதியர்கள் சங்க 26 ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் பாளை ஹைகிரவுண்டில் அமைந்துள்ள பொறியாளர் இல்லத்தில் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சீதாராமன், அமைப்பாளர் சண்முக சுந்தர்ராஜ், ஸ்டேட் பாங்க் ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

நிகழ்ச்சியினை ராஜ்குமார் அருளானந்தம் தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் மாநில துணைத்தலைவர் நல்லபெருமாள் மருத்துவ காப்பீட்டின் இன்றைய நிலை குறித்து உரையாற்றினார். 

துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தீர்மானங்களை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இணைய வழி குற்றப்பிரிவு பாளையங்கோட்டை பி பி முருகன், சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் சுவாதிகா ஆகியோர் கலந்து கொண்டு இனைய வழி குற்றம் சார்ந்த விழிப்புணர்வு உரையாற்றினர். 

தொடர்ந்து சைபர் குற்றத்திற்கு இலக்காக வேண்டாம் அழையுங்கள் உதவி எண் 1 9 3 0 என பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொருளாளர் செல்வராஜ் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார் .

கூட்டத்தில் தமிழ்நாட்டின் 13 வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவரது அமைச்சரவையின் அமைச்சர் பெருமக்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் திருநெல்வேலி மாநகர ஓய்வூதியர் சங்கம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. 

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுத்திட தமிழக முதல்வர் அவர்களை சங்கம் கேட்டுக்கொள்கிறது மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கட்டணம் எந்தவித உச்ச வரம் இன்றி 100% வழங்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad