வடலூரில் விலைவாசி உயர்வை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 அக்டோபர், 2026

வடலூரில் விலைவாசி உயர்வை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூரில் விலைவாசி உயர்வை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்ட தலைவர் , மாதவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் வி.மேரி அவர்கள் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பி முத்துலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் தேன்மொழி, மாவட்ட துணை செயலாளர் அன்பு செல்வி, நிர்வாகிகள் மனோரஞ்சிதம், அம்சா, மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவகாமி, தனலட்சுமி, விமலா, S.ரேவதி,R. ரேவதி மற்றும் மாத சங்க பெண்கள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது அரிசி பருப்பு , சர்க்கரை சிலிண்டருக்கு மாலை போட்டு மண்ணால் தண்ணீரில் பலகாரம் செய்து விலைவாசி உயர்வு பெண்களை எவ்வளவு பாதிக்கிறது என்பதை ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad