கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்குத்து அண்ணா கிராமத்தில் பெரியாரியல் விளக்க பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது
வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் முன்னாள் கடலூர் மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் இரா. சீனியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை ஒட்டி பெரியார் இயல் விளக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம் தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட துணை தலைவர் மணிவேல் பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் முன்னிலை வகித்தனர் மாவட்ட கழக இளைஞர் அணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் வரவேற்புரை வழங்கினார் மறைந்த சீனியம்மாள் குடும்பத்தினர் பகுத்தறிவு ,சந்திரபாபு மற்றும் தங்க பாஸ்கர் கனகராசு திருநாவுக்கரசு ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர்.
திராவிட கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை வழங்கினார் வடலூர் நகர கழக அமைப்பாளர் முருகன் முன்னாள் இளைஞர் அணி பொறுப்பாளர் வேலு நெய்வேலி பாவேந்தர் விரும்பி வடக்குத்து பாஸ்கர் ஊடக வியலாளர் திராவிடன் வடலூர் கலைச்செல்வி திமுக கோபால் சந்திரமோகன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஒன்றிய தலைவர் கனகராசு நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக