கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டத்திற்கு உட்பட்ட இருப்பு கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வீடு மற்றும் மனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் E. ரமேஷ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் N. சங்கலிங்கம், தெற்கு மாவட்ட செயலாளர் இரா. ஸ்டாலின், R. பாலமுருகன், R. வெற்றிவேல், M. சக்திவேல், K. வீரப்பன், ராமஜெயம், NK. ஹரி, வீரமணி, M. மாயகிருஷ்ணன், வைதேகி, KVK. பிரேம், ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏழைகள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் MAT. அர்ச்சுனன், சுவாமி ஜெகஜானந்தா, இரா. தமிழ்வாணன், பூ. பழனியாண்டவர், P.M. இளையகுமார், வழக்கறிஞர் T. ராஜீவ்காந்தி, ப. கொளஞ்சிநாதன், S. ஆனந்தகுமார், A. மணிவாசகம், R. சிவகுமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஏழை எளிய மக்களை வஞ்சிக்காதே இருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடு
ஏழை எளிய மக்களை வஞ்சிக்காதே உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக